இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை..! 7 பேர் தாயகம் திரும்பினர்!

navy officers

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது. கத்தார் நாட்டில் உள்ள  தனியார் நிறுவனம் ஒன்றில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அப்போது,  இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளையும் அந்த நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இது இந்திய அரசுக்கும், முன்னாள் வீரர்களின் குடும்பத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேருக்கும் அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு

அதாவது, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறப்படும் புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து, கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மத்திய அரசு இந்தியர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில், இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த கத்தார் நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்து 8 பேரை விடுதலை செய்தது. அதன்படி, விடுதலை செய்யப்பட்ட 8 பேரில் 7 பேர் இன்று காலை டெல்லி திரும்பினர். ஒருவர் இன்னும் இந்தியா திரும்பவில்லை. அவரும் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, 8 இந்தியர்களும் தஹ்ரா குளோபல் என்ற நிறுவனத்துக்காக கத்தாரில் தங்கி பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்