மேற்குவங்க பிர்புமில் 8 பேர் எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக 21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.
தீ வைத்து எரித்த சம்பவம்:
கடந்த திங்கள்கிழமை மேற்குவங்க மாநிலத்தில் பிர்பூம் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் 8 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். பஞ்சாயத்து துணை தலைவர் கொலைக்கு பழிவாங்க 10 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்ட நிலையில், அதனடிப்படையில் பஞ்சாயத்து துணை தலைவர் ஒருவர் கைதும் செய்யப்பட்டார்.
சிபிஐ விசாரணை:
இதனைத்தொடர்ந்து, மேற்குவங்க பிர்பூம் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் தீ வைத்து எரித்துக் கொள்ளப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க ஆணையிட்டிருந்தது. முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிபிஐக்கு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. பிர்பும் பகுதியில் நடந்த வன்முறை குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு:
இந்த நிலையில், மேற்குவங்க பிர்புமில் 8 பேர் எரித்து கொல்லப்பட்டது தொடர்பாக 21 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பிர்பூம் கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 21 பேர் மீது எஃப்ஐஆரில் பிரிவு 147, 148, 149 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…