8 வயது சிறுமி ஹரியானாவில் மர்மமான முறையில் கொலை!

Default Image

8 வயது சிறுமி ஹரியானாவில்  மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, உடலை பையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோத்தக் மாவட்டத்தில் டிட்டுலி ((Tituli)) கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 4 நாட்களாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஊரின் எல்லையில் உள்ள கழிவுநீரோடையில் பை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சென்று பையை சோதித்த போலீசார், மாயமானதாக கூறப்பட்ட சிறுமியின் உடல் இருப்பதை பார்த்தனர். சிறுமி கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிறுமி கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்