8 மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகளின் பத்து நாள் போராட்டம் தொடங்கியது!
எட்டு மாநிலங்களில் விவசாயிகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரம், கர்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் வெள்ளிக்கிழமை முதல் பத்து நாட்கள் போராட்டத்தை அவர்கள் தொடங்கி உள்ளனர்.
போராட்டம் நடைபெறும் நாட்களில் காய்கறிகள், பால் மற்றும் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்யப் போவதில்லை என்றும், நகர மக்கள் விரும்பினால், கிராமங்களுக்கு நேரடியாக வந்த விவசாயிகளிடம் வாங்கலாம் என்றும் கூறியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் புனே நகரில் பாலை தரையில் ஊற்றியும், மத்திய பிரதேசம், பஞ்சாப்பில் காய்கறிகளை சாலைகளில் கொட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.