7-ம் கட்ட தேர்தல் : 9 மணி அளவில் .. 11.31 % வாக்கு பதிவு!
மக்களவை தேர்தல் : கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 486 மக்களவை தொகுதிகளில் 6-கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின், 7-ம் கட்ட (இறுதி) தேர்தல் (57 தொகுதிகளில்) இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று தொடங்கிய 7-ம் கட்ட தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா அவர்கள் தனது மனைவி மல்லிகா நட்டாவுடன் ஹிமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.மேலும், உத்தரபிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் சோரக்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
மேலும், மக்கள் அனைவரும் காலை முதல் வரிசையில் நின்று பொறுப்புடன் வாக்களித்து வருகின்றனர். தற்போது, நடைபெற்று வரும் 7-ம் கட்ட தேர்தலில் 9 மணி அளவில் 11.31% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. அதன் படி மாநிலங்கள் வாரியாக நிலவரங்களை பார்க்கலாம்:
- பீகார் – 10.58%
- சண்டிகர் – 11.64%
- இமாச்சல பிரதேசம் – 14.35%
- ஜார்கண்ட் – 12.15%
- ஒடிசா – 7.69%
- பஞ்சாப் – 9.64%
- உத்தரப் பிரதேசம் – 12.94%
- மேற்கு வங்கம் – 12.63%