தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2022-23ம் ஆண்டில் ரயில்வே செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதால் 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ரூ.1,968.87 கோடி நிதி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். தீபாவளி போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11 லட்சத்து 7 ஆயிரத்து 346 ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர் தொழில்நுட்ப பணியாளர் உள்ளிட்டோர் போன்ஸால் பயன்பெறுவர். 2022-23ம் ஆண்டில் 650 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 151 கோடி டன் சரக்குகளை ரயில்வே கையாண்டுள்ளது என கூறியுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இதனிடையே, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) 4 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும். 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்றும் கடந்த ஜூலை 1-ஆம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. குரூப் சி மற்றும் குரூப் பி (Non-Gazetted) அதிகாரிகளுக்கு போனஸ் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை தீபாவளி போனஸ் வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…