மகாராஷ்டிராவை புரட்டிப்போடும் கொரோனா.! ஒரே நாளில் 778 பேர் பாதிப்பு.!

மகாராஷ்டிராவில் தான் பாதிப்பு, உயிரிழப்பும் அதிகம். அதன்படி நேற்று ஒரே நாளில் அமைச்சர் உட்பட 778 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசால் இதுவரை 23,077 பேர் பாதிக்கப்பட்டு, 718 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பின்னர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 4,749 பேர் வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் பாதிப்பு, உயிரிழப்பும் அதிகம். அதன்படி நேற்று ஒரே நாளில் அமைச்சர் உட்பட 778 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நேற்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மஹாராஷ்டிராவில் மொத்தம் இதுவரை 6427 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை 840 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளது. இதனிடையே தேசியவாத கட்சியை சேர்ந்த வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என தகவல் வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மும்பையில் தமிழர்கள் வசிக்கக்கூடிய தாராவியில் நேற்று மட்டும் 25 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் மும்பையில் இதுவரை 214 பேர் பாதிக்கப்பட்டு, 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The current count of COVID19 patients in the state of Maharashtra is 6427 Today newly 778 patients have been identified as positive for Covid19. From these,840 Covid19 patients have been cured and discharged from the respective hospitals.#CoronaVirusUpdates #MeechMazaRakshak
— Rajesh Tope (@rajeshtope11) April 23, 2020