இந்தியாவில் 760, தமிழ்நாட்டில் மட்டும் 38 பேருக்கு கொரோனா உறுதி!

Corona -JN1 Variant

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 760 கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவரும் மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளளது. இதனிடையே, நேற்றைய தினம் 775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 44,478,047 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 5,33,373பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,423 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இனி அனைத்து சேவைகளும் ஒரே ஆப்பில்.. விரைவில் ‘SUPER APP’ ..!

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க வயதானோர், குழந்தைகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறித்தியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 20 என்ற எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், பொது இடங்களில் மாஸ்க் அணிவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்