சீனா தாக்குதலில் 76 இந்திய ராணுவ வீரர்கள் காயம்..மருத்துவமனையில் சிகிச்சை
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 76 ராணுவ வீரர்கள் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில், 58 பேர் சிறு காயங்கள் ஏற்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 76 வீரர்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் யாரும் காணவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. காயமடைந்தவர்களில் 18 பேர் லேவில் இருக்கும் மருத்துவமனையிலும் மற்றும் 58 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.