75 வது சுதந்திர தினமும் சுதந்திர போராட்ட வீரர்களும்..
75-வது சுதந்திர தின விழா
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்தது. நம் முன்னோர்கள் நாட்டிற்காக பல தியாகங்கள் செய்து கிடைத்ததுதான் இந்த சுதந்திரம். நம் முன்னோர்களை போற்றும் வகையில் இத்தினத்தை நாம் அவசியம் கொண்டாட வேண்டும். வரும் ஆகஸ்ட்15-ம் தேதி இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
தேசத்தந்தை மகாத்மா காந்தி
இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரான மகாத்மா காந்தி இந்தியாவின் விடுதலைக்காக முழுமூச்சாக போராடியவர். 1930 மார்ச் 2 ஆங்கிலேயர்களுக்கு எதிராக உப்பு சத்தியாகிரகம் செய்தார். காந்தி அகிம்சை வழியை பின்பற்றியவர். 1942ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்திலும் பெரும் பங்கு வகித்தார். தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்
வ.உ.சி, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். இவர் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை கொண்டவர். ஆங்கிலேயர்களை எதிர்த்து ‘சுதேசி’ என்னும் முதல் இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1751 ஆம் ஆண்டில் இந்திய விடுதலைக்காக `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக வீர முழக்கமிட்டவர்.
மகாகவி சுப்பிரமணிய பாரதி
சுப்பிரமணிய பாரதி-கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி.
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே-பாரதி”
பாரதியின் உணர்ச்சிமிக்க பாடல்கள் மூலம் மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியவர்.
பகத் சிங்
இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளர் பகத் சிங். இவர் இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர். பகத் சிங் தனது 24வது வயதில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வு பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது. இந்திய விடுதலைக்காக பெரும் பாடுபட்டவர் பகத் சிங்.
கொடிகாத்த குமரன்
ஆங்கிலேயர்களிடம் தடியடிபட்டு கீழே விழுந்த நிலையிலும், அவர் தன் கையில் இருந்த, தேசிய கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் “கொடிகாத்த குமரன்” என்று அழைக்கபட்டார்.