மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் – பிரதமர் மோடி ட்வீட்..!
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும் என பிரதமர் மோடி ட்வீட்.
மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் பிரபலன்கள்பலரும் அவரது நினைவை போற்றி, சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
எ நவகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மகாத்மா காந்தியின் உன்னதமான கொள்கைகளை மேலும் பிரபலப்படுத்துவது நமது கூட்டு முயற்சியாகும். தியாகிகள் தினமான இன்று நமது தேசத்தை துணிச்சலுடன் பாதுகாத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் சேவையும் துணிச்சலும் என்றும் நினைவு கூறப்படும்.’ என பதிவிட்டுள்ளார்.
Remembering Bapu on his Punya Tithi. It is our collective endeavour to further popularise his noble ideals.
Today, on Martyrs’ Day, paying homage to all the greats who courageously safeguarded our nation. Their service and bravery will always be remembered.
— Narendra Modi (@narendramodi) January 30, 2022