75வது அரசியல் சாசன தினம்! ஒரே மேடையில் திரௌபதி முர்மு, மோடி, ராகுல் காந்தி, கார்கே…

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் 75வது அரசியல் சாசன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி , ராகுல் காந்தி, கார்கே மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

75th Constitution Day

டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு 1950 ஜனவரி 26இல் இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்பட்டது. அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் தேதியானது ஆண்டுதோறும் அரசியல் சாசன தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்டுகிறது.

இன்று 75வது அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அலுவல் பணிகள் இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இந்த இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்வில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு மற்றும் பலர் இந்திய அரசியலமைப்பின் 75வது ஆண்டு தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் 15 பெண் உறுப்பினர்கள் முக்கிய பங்காற்றினார் என குறிப்பிட்டு அவர்கள் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்.

மேலும், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நமது ஜனநாயகத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் உள்ளது எனவும்,  இந்திய அரசியலமைப்பு என்பது ஒரு முற்போக்கு ஆவணம் என்றும் அரசியலமைப்பு தின நிகழ்வில் திரௌபதி முர்மு கூறினார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் மட்டுமே பேசவுள்ளதாக கூறப்பட்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சி சார்பிலும் பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால் அதற்கு தற்போது வரையில் அனுமதி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்