இந்த ஆண்டுக்கான தொகையாக 22 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.7,532 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) கீழ் 22 மாநிலங்களுக்கு ரூ.7,532 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின்படி இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி ரூபாயை அளித்தது மத்திய அரசு. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.1,420 கோடி ஒதுக்கப்பட்டது. மழை, வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட தொகையின் மாநில வாரியான விவரம்:
1. ஆந்திரப் பிரதேசம் – ரூ.493.60 கோடி
2. அருணாச்சல பிரதேசம் – ரூ.110.40
3. அசாம் – ரூ.340.40
4. பீகார் – ரூ.624.40
5. சத்தீஸ்கர் – ரூ.181.60
6. கோவா – ரூ.4.80
7. குஜராத் – ரூ.584
8. ஹரியானா – ரூ.216.80
9. இமாச்சல பிரதேசம் – ரூ.180.40
10. கர்நாடகா – ரூ.348.80
11. கேரளா – ரூ.138.80
12. மகாராஷ்டிரா – ரூ.1420.80
13. மணிப்பூர் – ரூ.18.80
14. மேகாலயா – ரூ.27.20
15. மிசோரம் – ரூ.20.80
16. ஒடிசா – ரூ.707.60
17. பஞ்சாப் – ரூ.218.40
18. தமிழ்நாடு -ரூ.450
19. தெலுங்கானா – ரூ.188.80
20. திரிபுரா – ரூ.30.40
21. உத்தரப்பிரதேசம் – ரூ.812
22. உத்தரகாண்ட் – ரூ.413.20
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…