22 மாநிலங்களுக்கு ரூ.7,532 கோடி பேரிடர் நிவாரண நிதி விடுவிப்பு.!

Disaster relief

இந்த ஆண்டுக்கான தொகையாக 22 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.7,532 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) கீழ் 22 மாநிலங்களுக்கு ரூ.7,532 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின்படி இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி ரூபாயை அளித்தது மத்திய அரசு. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.1,420 கோடி ஒதுக்கப்பட்டது. மழை, வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தொகையின் மாநில வாரியான விவரம்:


1. ஆந்திரப் பிரதேசம் – ரூ.493.60 கோடி

2. அருணாச்சல பிரதேசம் – ரூ.110.40

3. அசாம் – ரூ.340.40

4. பீகார் – ரூ.624.40

5. சத்தீஸ்கர் – ரூ.181.60

6. கோவா – ரூ.4.80

7. குஜராத் – ரூ.584

8. ஹரியானா – ரூ.216.80

9. இமாச்சல பிரதேசம் – ரூ.180.40

10. கர்நாடகா – ரூ.348.80

11. கேரளா – ரூ.138.80

12. மகாராஷ்டிரா – ரூ.1420.80

13. மணிப்பூர் – ரூ.18.80

14. மேகாலயா – ரூ.27.20

15. மிசோரம் – ரூ.20.80

16. ஒடிசா  – ரூ.707.60

17. பஞ்சாப் – ரூ.218.40

18. தமிழ்நாடு  -ரூ.450

19. தெலுங்கானா – ரூ.188.80

20. திரிபுரா – ரூ.30.40

21. உத்தரப்பிரதேசம் – ரூ.812

22. உத்தரகாண்ட்  – ரூ.413.20

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்