டெல்லி : 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிய பின், நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
டெல்லி செங்கோட்டையில் தொடர்ந்து 11வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார. நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தியதை, தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையை சென்றடைந்தார்.
அங்கு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, நமது நாட்டின் மிக உன்னதமான இந்திய தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும், செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிய கையோடு, தான் உரையாற்ற உள்ள மேடைக்கு சென்று மக்கள் முன் கையசைத்து உற்சாகப்படுத்தினார். அதன்பின், நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
மேடையில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய நாட்டில் இன்று 140 கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தீர்மானித்து ஒரே திசையில் ஒன்றாகச் சென்றால், 2047-க்குள் அனைத்து தடைகளையும் கடந்து ‘வளர்ந்த பாரதம்’ என்ற குறிக்கோளை அடையலாம்.
இந்திய இளைஞர்கள் இப்போது மெதுவாக நடக்க விரும்பவில்லை, துள்ளிக் குதித்து, புதிய இலக்குகளை அடையும் மனநிலையில் உள்ளனர். இதனால், இந்தியாவிற்கு இது பொற்காலம் என்று நான் கூற விரும்புகிறேன். நம் நாட்டில் விவசாயிகள், ராணுவ வீரர்கள் நாட்டுக்காக கடுமையாக உழைக்கிறார்கள்” என்று பேசினார்.
உலக நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது நமக்கு பொற்காலம் தான். நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை இந்நேரத்தில் நான் போற்றுகிறேன். குறிப்பாக, விவசாயிகளும், ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக நாட்டு மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். நமது பல்வேறு திட்டங்களின் மூலம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பயனடைந்துள்ளனர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து 40 கோடி இந்தியர்கள்தான் போராடினர். தற்போது 140 கோடி மக்கள் உள்ள நிலையில், இந்தியா வலிமை அடைந்துள்ளது. 2040க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல 140 கோடி மக்களின் கனவு ஆகும். உலக அளவில் 3வது பெரிய பொருளாதாரத்தை இந்தியா வெகு விரைவில் அடையும். 2047ல் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது ஊடகத்துறை உலகளாவிய ஊடகத்துறையாக மாற்றம் பெறும்.
செங்கோட்டை முதல் கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் குறுகிய காலத்தில் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2.50 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏழைத் தாய்மார்களின் கண்ணீரை துடைக்கும் உஜ்வாலா திட்டம், 3-ஆம் பாலினத்தவருக்கு அதிகாரம் அளிக்கவும் மரியாதை அளிக்கவும் புதிய சட்டம் கொண்டு வந்தோம். நீதி வழங்கும் அமைப்பை துரிதப்படுத்த புதிய குற்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய சட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என்றார்.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என உறுதியளித்துள்ளார். மாணவர்கள் வெளிநாடுகளுக்கு உயர்கல்வி படிக்க செல்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் கல்வி துறையில் அரசு மாற்றம் ஏற்படுத்த முயல்வதாகவும், பெண்களுக்கு மரியாதை அளிப்பதுடன் நிறுத்தி விடாமல், அவர்களின் உள்ளார்ந்த தேவைகளை அரசு பூர்த்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
விண்வெளித் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்களை நாம் கொண்டு வந்துள்ளோம். விண்வெளி துறையை துடிப்பு கொண்டதாக நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம். அது மட்டும் இல்லாமல், தனியார் துறை செயற்கைக்கோள்கள் ஏவப்படுவது, நமக்கு ஒரு பெருமையான விஷயம்.
உலக வளர்ச்சி, ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இயற்கை உணவுகளுக்கான தேவையும் விருப்பமும் அதிகரித்து வருகிறது. அதற்கான பெரும்பாலான அளவு பங்காற்றுகிறது நம் இந்தியா. உலக அளவில் இயற்கை உணவு கூடாரமாக இந்தியா உருவாக வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக பல மோசமான பேரிடர்களை எதிர்கொண்டு வந்தாலும், அதில் இருந்து மீண்டு வருகிறோம். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணைநிற்போம். பேரிடர் காலங்களில் உறவுகளை இழந்தவர்களுக்கு இந்த தேசம் துணை நிற்கும். வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்பு வேதனை அளிக்கிறது.
இவ்வாறு செங்கோட்டையில் நமது இந்திய தேசியக் கொடியை ஏற்றிய பின்பு பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
டெல்லி : முன்னதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது ஒரு மிகபெரிய…
சென்னை : நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் ஒருவரையொருவர் பிரிவதாக 2022 இல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த ஜோடி அவர்களின் 18…
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது.…
சென்னை : திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுகளாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன என்று விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 21] எபிசோடில் பணம் திருடியது மீனாதான்.. பதுங்குகிறார் ரோகினி.. பணத்தை காணுமா ?ஷாக்கில்…
சென்னை : இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், அவருடைய பெயர் தான்…