750 கோடி வங்கி மோசடி,! ரோட்டோமேக் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு.!

Default Image

750 கோடி வங்கி மோசடி வழக்கில் ரோட்டோமேக் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு.

எழுதுபொருள் நிறுவனமான ரோட்டோமேக், பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான ஏழு வங்கிகளின் கூட்டமைப்பிற்கு எதிராக மொத்தம் ரூ. 2,919.39 கோடி நிலுவையில் வைத்துள்ளது, இதில் இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (ஐஓபி) 23 சதவீத வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளது.

கான்பூரைச் சேர்ந்த ரோட்டோமேக் குளோபல் மற்றும் அதன் இயக்குநர்கள் சாதனா கோத்தாரி மற்றும் ராகுல் கோத்தாரி , நிறுவனத்தின் விளம்பரதாரர் விக்ரம் கோத்தாரியின் மனைவி மற்றும் மகன் – இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு(IOB) ரூ.750.54 கோடி பண இழப்பை ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

நவம்பர் 14 அன்று ஐஓபியின் லக்னோ கிளையின் தலைமை மண்டல மேலாளர் சஞ்சய் கிஷோர் அளித்த புகாரின் அடிப்படையில், இயக்குநர்கள் சாதனா மற்றும் ராகுல் கோத்தாரி மற்றும் பிற பொது ஊழியர்களுக்கு எதிராக ஐபிசி பிரிவுகள் 210-பி (குற்றச் சதித்திட்டத்தின் கீழ்) மற்றும் 420 (ஏமாற்றுதல்), ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

எஃப்ஐஆரில் கிஷோர் அளித்த புகாரில், ஜூன் 28, 2012 அன்று, நிறுவனத்திற்கு நிதியல்லாத ரூ. 500 கோடி வரம்பை அனுமதித்ததாகவும், ஆனால் நிறுவனம் 750.54 கோடி பணம் செலுத்த தவறிய பிறகு 11 கடன் கடிதங்களை (எல்சி) வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் மொத்தமாக ரூ. 743.63 கோடியை உள்ளடக்கியது, வங்கிக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை என கூறியிருந்தார்.

நிறுவனம் மேற்கொண்ட வர்த்தகத்திற்கான முழுமையான ஆவணங்களைத் தயாரிக்கவில்லை, வங்கியால் நடத்தப்பட்ட தணிக்கையில் விற்பனை ஒப்பந்தங்கள், சரக்கு கட்டணங்கள் மற்றும் அதற்கான பயணங்களில் முறைகேடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன்மூலம் ரோட்டோமேக் நிறுவனமானது வங்கிக்கு ரூ.750.54 கோடி நிதியிழப்பு செய்து தவறான முறையில் லாபம் பெற்றுள்ளது தெரிய வந்தது, இதனையடுத்து ரோட்டோமேக் நிறுவனத்தின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்