இதுவரை 75 லட்சம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பல கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அதில், பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். அந்த காட்சிகள் தினந்தோறும் இணையத்தில் வைராகி வருகிறது. இதன் காரணமாக, புலப்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு சேர்க்க மத்திய அரசு சிறப்பு ரெயில்களை விடத் தொடங்கியது.
இதுகுறித்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால் நாடு முழுவதும் 4 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இதுவரை 75 லட்சம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு விட்டனர். இதில், சிறப்பு பஸ்கள் மூலம் மட்டுமே 40 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
பின்னர் புலப்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடங்களுக்கும் ஏற்பாடு செய்து தருமாறும் கூறப்பட்டது. இதற்காக தேசிய பேரிடர் நிவாரண பதிலளிப்பு நிதியாக மாநிலங்களுக்கு மத்திய அரசு கடந்த மாதம் ரூ.11 ஆயிரத்து 92 கோடியை வழங்கியது. மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை கவனிப்பதற்காக இணைச் செயலாளர் அந்தஸ்து அதிகாரிகள் மேற்பார்வையில் 24 மணி நேரமும் இயங்குகிற கட்டுப்பாட்டு அறையை உள்துறை அமைச்சகம் அமைத்தது என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…