75 சதவீதம் பேருக்கு பிரதமர் மோடியை தெரியாது.! சர்வேயில் அதிர்ச்சி தகவல்..!
கனடாவில் கியூபெக் மாகாணத்தில் உள்ள சார்லேவாய்ஸ் நகரில் ஜி 7 தலைவர்கள் மாநாடு மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் குறித்து கனடாவில் 150 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த ஆய்வை ‘ஆங்கள் ரெய்டு’ நிறுவனம் நடத்தியது. அதில் பிரதமர் நரேந்திரமோடி குறித்து கருத்து கேட்கப்பட்டது.
மேலும் மோடியின் ஆங்கில உச்சரிப்பு மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் குறிப்பாக மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய பத்திரிகையாளர்களை கவரவில்லை. இந்தியாவுடனான உறவை இங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் வர்த்தக ரீதியில் கனடா மக்கள் அங்கீகரித்துள்ளனர். கனடாவில் மோடியை பொறுத்தவரை அவர் மிகப்பெரும் பிரபலமானவரோ அல்லது முக்கிய பிரமுகரோ இல்லை. எனவேதான் கனடாவில் குறைந்த அளவிலான மக்களுக்கு மோடியை தெரிந்துள்ளது என்றார்.
மேலும் கருத்து வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை 74 சதவீதம் பேருக்கு பிடிக்கவில்லை. அவர் ஒரு திமிர் பிடித்தவர் என தெரிவித்துள்ளனர். அவர் ஒரு பொய்யர், உண்மையற்றவர், ஊழல்வாதி என்றும் கூறியுள்ளனர்.
அதேநேரத்தில் 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் அப்போதைய அதிபர் ஒபாமா மீது கனடா மக்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவர் உண்மையானவர், பிறரை கவர்ந்திழுக்கும் மனித பண்பு மிக்கவர், இரக்ககுணம் மிக்கவர், பலரை கவரும் திறன் படைத்தவர் என்றெல்லாம் புகழாரம் சூட்டினர்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது கனடா மக்கள் குறைந்த அளவு பாசம் வைத்துள்ளனர். சக்திமிக்க தலைவர்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சல் மெர்சல், சீன அதிபர் ஸி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோர் உள்ளனர். பிறரை கவர்ந்திழுக்கும் மனித பண்புமிக்கோர் பட்டியலில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் முதலிடத்தில் உள்ளார்