டெல்லியில் 74-வது குடியரசு தினவிழா! அணிவகுப்பு.!
டெல்லியில் குடியரசு தினவிழாவில், அணிவகுப்பு கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.
இந்தியாவின் 74ஆவது குடியரசு தினவிழா இன்று நாடுமுழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, தேசிய போர் நினைவிடத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதையை செலுத்தினார். இந்தவிழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி, சிறப்பு விருந்தினராக பங்கேற்க, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை திரௌபதி முர்மு ஏற்று விழாவை சிறப்பித்து வருகிறார்.
முன்னதாக பிரதமர் மோடி, தேசிய போர் நினைவிடத்தில் உயிரிழந்த போர்வீரக்ளுக்கு வீரவணக்கத்தை செலுத்தினார். கார்தவ்ய பாதையில் நடைபெற்று வரும் அணிவகுப்பில் முப்படைகளின் அணிவகுப்பு, ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளின் அணிவகுப்பு, ராணுவ பீரங்கி வாகனங்கள், நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் கட்சிகளுடன் கூடிய ஊர்திகள், மேலும் பிரமோஸ் ஏவுகணைகளின் அணிவகுப்பும் பங்கேற்று நடைபெற்று வருகிறது.
சுதந்தரத்திற்கு போராடிய வீரர்களின் காட்சிப்படுத்தப்பட்ட ஊர்திகள், நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெற்று வருகின்றன.