இன்று தனது 74வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது ‘சுதந்திர’ இந்தியா.!

Default Image

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா, ஆங்கிலேய அரசின் அதிகாரத்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. உலகின் மிகப்பெரிய சுதந்திர ஜனநாயக நாடாக உருவெடுத்து இன்றுடன் 73ஆண்டுகள் நிறைவடைந்து 74வது சுதந்திர ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது சுதந்திர இந்தியா.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தனது 74 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. அடிமைப்பட்டு கிடந்த இந்திய மக்களுக்கு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்த நாள் இன்று. இந்த சுதந்திரத்திற்காக பல லட்சக்கணக்கானோர் தங்கள் உயிரை துட்சமென மதித்து நமக்காக நமது சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்பது இன்று நாம் நினைவுகூரத்தக்கது.

1757 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி என்ற வணிக நிறுவனத்தை கட்டமைத்தது. அதன் பின்னர், அவர்களின் சூழ்ச்சி மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்து மக்களை அடிமை படுத்தி சுமார் 400 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர்.

1857ஆம் ஆண்டு முதல் சுதந்திர போராக அறியப்பட்ட சிப்பாய் புரட்சி உருவானது. அதனை ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். அதன் பின்னர், புரட்சி படைகள் மூலமும், அகிம்சை போராட்டங்கள் மூலமும் லட்சக்கணக்கானோர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினர்.

அதில் மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டம் கோடிக்கணக்கான இந்தியார்களை ஒன்று சேர்த்தது. இதனால், ஆங்கிலேயர்களின் ஆட்சி ஆட்டம் கண்டது. 1947இல் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.

இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றிற்காக அன்று பல லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை துறந்திருக்கிறார்கள். அந்த தியாகிகளை நினைவுகூர்ந்து அந்த சுதந்திரத்தை பேணி பாதுகாப்பது நம் இந்தியர் ஒவ்வொருவரின் கடமை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்