இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,421பேருக்கு தொற்று பாதிப்பு…! 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை …!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70,421 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,921 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,95,10,410 ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 70,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 10,413 ஆயிரம் குறைவாக உள்ளது.
- கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,95,10,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 3,921 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,74,305 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,19,501 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,81,62,947 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,73,158 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 25,48,49,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.