புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு : யூனிசெப் தகவல்…!!
புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் பிறந்து இருப்பதாக யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் பிறப்பு விவகாரத்தில் சீனாவை இந்தியா முந்தி இருப்பதாக கூறியுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்து இருப்பதாகவும், அதேசமயம் சீனாவில் 44 ஆயிரத்து 940 குழந்தைகள் மட்டுமே பிறந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் 25 ஆயிரத்து 685 குழந்தைகள் பிறந்து இருப்பதாக யூனிசெப் கூறியுள்ளது.
குழந்தைகளுக்கான அத்தியாவசிய சேவைகளை உறுதிப்படுத்தும் ஆண்டாக 2019ம் ஆண்டு அமைந்து இருப்பதால், இது தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.