மகாராஷ்டிராவில் 7,000 மருத்துவர்கள் போராட்டம்.! விடுதி வசதி, காலிப்பணியிடங்கள் என பல்வேறு கோரிக்கைகள்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிராவில் 7 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் உள்ள அரசுக் கல்லூரிகளில் வசிக்கும் 7,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கும் விடுதிகளின் தரம் சரியாக இல்லை, மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி மற்றும் இணைப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக திங்கள்கிழமை (இன்று) வேலைநிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறுகையில், போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். வேலைநிறுத்தம் செய்வதற்கு முன்னர் அவர்கள் எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை.’ என்றும் அமைச்சர் கூறினார்.