700 விவசாயிகள் உயிரிழப்பு : மத்திய அரசு இழப்பீடு தராதது ஏன்…? ராகுல் காந்தி!
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 700 மத்திய அரசு இழப்பீடு தராதது ஏன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் குறித்து தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியுள்ளார். அதில், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் ஓராண்டு காலமாக நடத்திய போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களது குடும்பத்திற்கு மத்திய அரசு இழப்பீடு தராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பஞ்சாப்பில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படுவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்பட்டு வருகிறது .ஆனால் மத்திய அரசு ஏன் இழப்பீடு வழங்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.