5 வருடங்களுக்கு முன்பதாக சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகிய 70 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை உத்தரவு!
2015 ஆம் ஆண்டில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 70 வயது பெண் மற்றும் அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தற்பொழுது உத்திரப்பிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்துவிட்டது. இதற்கான தண்டனை தொடர்ச்சியாக வழங்கப்படும் பட்சத்தில் இந்த குற்றங்கள் குறையும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 70 வயது பெண் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் தற்போது அந்த 70 வயது பெண் மற்றும் அவரது 30 வயது மகனுக்கு உத்திரபிரதேசம் காஜியாபாத் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் மீது தாய் கொலை, கடத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது தாயின் உதவியுடன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 30 வயது நபரும் ஒப்புக் கொண்டுள்ளார் என அரசு சிறப்பு வக்கீல் சஞ்சீவ் அவர்கள் கூறியுள்ளார்.