வெள்ளரிக்காய் தருவதாக கூறி சிறுமியை சீரழித்த 70 வயது நபர்!தொடர்ந்து வந்த வழக்கு!
- 8-ம் வகுப்பு சிறுமியை வெள்ளரிக்காய் தருவதாக கூறி கிணற்று அடியில் வைத்து பலாத்காரம் செய்த 70 வயது முதியவர்.
- தொடர்ந்து நடந்து வந்த வழக்கில் ஆயுள் தண்டனையும் 35 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டத்தில் தியோலி மஞ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த பாபுலால் மாலிக் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார்.இவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியை பின்தொடர்ந்துள்ளனர்.
பின்னர் அந்த சிறுமியை வழிமறித்து வெள்ளரிக்காய் தருவதாக கூறியுள்ளார்.அதை நம்பி அவர்களுடன் சென்ற சிறுமியை இருவரும் அருகில் இருந்த கிணற்று அடிக்கு அழைத்தது சென்றுள்ளனர்.
பின்னர் அந்த 70 வயது முதியவர் 8 -ம் வகுப்பு படிக்கும் சிறுமி என்று கூட பாராமல் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இங்கு நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக கூறியுள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்தை தன் பெற்றோருடன் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதியவரையும் அவரது கூட்டாளியையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் காரணமாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 35 ஆயிரம் அபராதம் விதித்து ராஜஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.