பாகிஸ்தான் கால தாமதம் செய்வதால் 70% வெங்காயம் வீணாகிறது.!

Default Image

கடந்த சில தினங்களாக தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. எனவே, அதனை ஈடுகட்டும் விதமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, பாகிஸ்தானின் அட்டாரி வாகா எல்லை வழியாக இந்தியாவிற்கு ஏற்றுமதி ஆகும் பொருட்களை கொண்டு செல்ல பாகிஸ்தான்-ஆப்கன் ஒப்பந்தப்படி பாகிஸ்தான் அனுமதித்து வருகிறது.

அந்த வகையில், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் சோதனை செய்வதில் காலம் தாமதம் செய்வதாகவும், இதனால் இந்தியாவிற்கு ஏற்றி செல்லப்படும் வெங்காயத்தில் 30% மட்டுமே இறக்குமதி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 70% வெங்காயம் காலம் தாழ்த்தும் காரணத்தால் வீணாக்குவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் தற்போதும் தனது நிலப்பரப்பை இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான இருவழி வர்த்தகத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்காமல் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Spain Andaluz Viilage Street view
actor soori
Ashwin -Sachin -Kapil Dev
Tamilnadu CM MK Stalin
Mayandi who was murdered in Nellai Court
American YouTuber - jaystreazy