மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை தாக்குபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் பரவி வந்தாலும் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதார பணியாளர்கள் செவிலியர்கள் போன்றோர்கள் மிகவும் மதிக்கத்தக்கவர்களாகவே கருதப்பட வேண்டும். ஆனால், கொரோனாவால் தங்கள் உறவினர்கள் உயிரிழந்து விடும் பட்சத்தில் பலர் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதனையடுத்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அவர்கள் நேற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் தாக்குதல் போன்றவை அவர்களது மன உறுதியைக் குலைத்து, பாதுகாப்பின்மையை உருவாக்கும் எனவும், இனி மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுபவர்கள் மீது 2020ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 2020 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட தொற்றுநோய் சட்டத்தின் கீழ் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம். ஆனால் கொடும் காயங்கள் ஏற்பட்டிருந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதிக்கலாம் என இந்த சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…