7 பெண்கள் உடல் நசுங்கி பலி.! ஷேர் ஆட்டோ – லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!
கர்நாடக மாநிலம் பிடர் மாவட்டத்தில் ஷேர் ஆட்டோ – லாரி நேருக்கு நேர் மோதியதில் 7 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பிடர் மாவட்டத்தில் சிட்டகுப்பா தாலுகோவில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) வேலை முடிந்து பெண்கள் ஷேர் ஆட்டோ மூலம் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள அரசு பள்ளி அருகே வரும்போது ஷேர் ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் சம்பவ இடத்தியிலேயே 7 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில் இரு வாகன ஓட்டுனர்கள் உட்பட 11 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
அதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பார்வதி ( வயது 40), பிரபாவதி (வயது 36), குண்டம்மா (வயது 60), யாதம்மா (வயது 40), ஜக்கம்மா (வயது 34) ஈஸ்வரம்மா (வயது 55), ருக்மணி பாய் (வயது 60) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.