Helicopter crash: கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட 7 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். கேதார்நாத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள கருட் சட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குப்தகாசியில் இருந்து புறப்பட்டு கேதார்நாத் நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்பொழுது கருட் சட்டிக்கு மேலே ஹெலிகாப்டர் தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர், விரைவில் விசாரணை தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி வரை இருக்கலாம் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயர சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் வேதனை அடைந்துள்ளேன். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.
Anguished by the helicopter crash in Uttarakhand. In this tragic hour, my thoughts are with the bereaved families: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 18, 2022