டெல்லி: உடல் உறுப்பு விற்பனையில் ஈடுபட்டதாக மருத்துவர் உட்பட 7 பேர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகளை, அவர்களின் உறவினர்கள் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தேவைப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிப்பது சமீப காலமாக மருத்துவ உலகில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உடல் உறுப்புகளை விற்பனை நோக்கத்தில் தானம் செய்வது சட்டப்படி பெரும் குற்றமாகும். இதனை தலைநகர் டெல்லியில் ஒரு கும்பல் தொடர்ந்து செய்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை பல லட்சங்கள் பரிவர்த்தனை செய்து வியாபார நோக்கத்தில் மேற்கொண்டது டெல்லி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், வியாபார நோக்கத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக இதுவரை ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாற்று அறுவை சிகிச்சைக்கும் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை இந்த கும்பல் வசூல் செய்துள்ளது. இந்த மாற்று அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு இடையில் நடைபெற்றுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல் 2019 முதல் இந்த குற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளது என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாந்தரா மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடி…
சென்னை : இன்று பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் 51 பேர் உட்பட நாம்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை விஜய் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கினார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…