டெல்லியில் உடல் உறுப்பு விற்பனை.? மருத்துவர் உட்பட 7 பேர் அதிரடி கைது.!

Organ Transplant Tacket

டெல்லி: உடல் உறுப்பு விற்பனையில் ஈடுபட்டதாக மருத்துவர் உட்பட 7 பேர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூளைச்சாவு அடைந்தோரின் உடல் உறுப்புகளை, அவர்களின் உறவினர்கள் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தேவைப்படும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிப்பது சமீப காலமாக மருத்துவ உலகில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. உடல் உறுப்புகளை விற்பனை நோக்கத்தில் தானம் செய்வது சட்டப்படி பெரும் குற்றமாகும். இதனை தலைநகர் டெல்லியில் ஒரு கும்பல் தொடர்ந்து செய்து வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை  பல லட்சங்கள் பரிவர்த்தனை செய்து வியாபார நோக்கத்தில் மேற்கொண்டது டெல்லி போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், வியாபார நோக்கத்தில்  உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக இதுவரை ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாற்று அறுவை சிகிச்சைக்கும் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை இந்த கும்பல் வசூல் செய்துள்ளது. இந்த மாற்று அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு இடையில் நடைபெற்றுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த கும்பல் 2019 முதல் இந்த குற்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளது என டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்