திரிபுரா ரத யாத்திரையின்போது நடந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..! முதல்வர் மாணிக் சாஹா இரங்கல்..!

TripuraAccident

திரிபுரா ஜெகநாதர் ரதம் உயர் அழுத்த மின் கம்பிகளில் உரசியதில் ஏழு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில் நடந்த ரத யாத்திரையின் போது உயர் அழுத்த மின் கம்பியில் ரதம் உரசியதில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஜகந்நாதரின் ‘உல்டா ரத யாத்திரை’ திருவிழாவின் போது குமார்காட் பகுதியில் மாலை 4.30 மணியளவில், இரும்பை பயன்படுத்தி கட்டப்பட்ட ரதத்தை ஏராளமானோர் இழுத்துள்ளனர். அப்பொழுது, ரதம் தற்செயலாக மின் கம்பியில் உரசி, ரதம் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

இந்த விபத்திற்கு முதல்வர் மாணிக் சாஹா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், குமார்காட்டில் உல்டா ரத யாத்திரையின் போது மின்சாரம் தாக்கியதில் பல பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் சிலர் காயம் அடைந்தனர். துயரத்தில் தங்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இக்கட்டான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு துணை நிற்கிறது என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்