மகாராஷ்டிராவில் புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
தென் ஆபிரிக்க நாடுகளில் பரவி வரக்கூடிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளதுடன், விமான நிலையங்களிலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் ஏற்கனவே 5 பேருக்கு நாடு முழுவதும் ஓமைக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அதில் நான்கு பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் எனவும், 3 பேர் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்த உறவினர்கள் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமைக்ரான் உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு 12 ஆக அதிகரித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…