7 பதக்கங்கள் – டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த இந்தியா..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா ஒரு தங்க பதக்கம் உட்பட 7 பதக்கங்களை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கங்களை இந்தியா பெற்றது. இதன் பின்னர் ரியோ ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை மட்டுமே பெற்றது.
அதில் ஒன்று வெள்ளி, மற்றொன்று வெண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம் உட்பட 7 பதக்கங்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா ஒலிம்பிக் போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இதனால் ஒலிம்பிக் பதக்கபட்டியலில் தற்போது 47 ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு கடைசி நாளான இன்று, பஜ்ரங் பூனியா மல்யுத்தத்தில் வெண்கலமும், நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதனால் ஒலிம்பிக் போட்டியில் வென்றவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.