Haryana [file image]
சென்னை : ஹரியானாவில் லாரி மீது மினி பேருந்து மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் (மே 24) வெள்ளிக்கிழமை அதிகாலையில் நின்று கொண்டு இருந்த லாரி ஒன்று மீது மினி பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பாலா-டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு மினி பேருந்தில் பக்தர்கள் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது திடீரென பேருந்து அம்பாலாவில் உள்ள என்டிஐ பிளாசா மொஹ்ரா அருகே ஜிடி சாலையில் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவலை கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து அம்பாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில், டிரைவர் குடிபோதையில் இருந்ததாகவும், விபத்து நடந்த உடனேயே அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் கூறினார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…
ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…