மணிப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு!
மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு.
மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது கண்ணிவெடி மூலம் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அதிகாரி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அதிகாரி, மனைவி, மகன், ட்ரைவர் மற்றும் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கர்னல் விப்லவ் திரிபாதியின் மனைவியும் மகனும் கான்வாய் வாகனத்தில் இருந்தனர். மாவட்டத்தில் ஒரு குடிமை நடவடிக்கை திட்டத்தை மேற்பார்வையிட சென்றபோது காலை 10 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.