தினமும் 7 மணி நேரம் கொரோனா பரிசோதனை – பெங்களூரு மாநகராட்சி
தினமும் 7 மணி நேரம் கொரோனா பரிசோதனை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 8 மண்டலங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ள நிலையில், பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள 44 வார்டுகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படி அந்த மண்டல பொறுப்பு மந்திரி ஆர்.அசோக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தெற்கு மண்டலத்தில் உள்ள வார்டுகளில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும், அங்கு வசிக்கும் மக்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள 8431816718 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.