பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள டாடர்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 11.45 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் 3 வீடுகள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் இரண்டு மாடி வீடு இடிந்த நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர்களில் கணேஷ் மண்டல் என்கிற கணேஷ் சிங் (60), நந்தினி (30) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் வெடிவிபத்து ஏற்பட்ட குடும்பம் பட்டாசு தயாரிப்பதில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…