Bihar Elections: 9 மணி வரை எவ்வுளவு வாக்குகள் பதிவாகியுள்ளது ?

பீகார் தேர்தலில் 9 மணி வரை பதிவான வாக்கு சதவிகிதம் வெளியாகியுள்ளது.
பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும், செவ்வாயன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குபதிவில் 55.70% வாக்குகளும் பதிவாகியிருந்தது.
இதனை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான மூன்றாம் கட்ட வாக்குபதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது. இன்று, 19 மாவட்டங்களில் உள்ள 78 சட்டசபை தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பீகார் தேர்தலில் 9 மணி நிலவரப்படி 7.69% வாக்குகள் பதிவாகியுள்ளது.