மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் காலை நிரவப்படி 7.57 சதவிகித வாக்குகள் பதிவு.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.
இந்த தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக தேர்வு செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை.
இதற்கு ஏதுவாக பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவும், வேளாண் அமைச்சராக இருந்த சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அத்தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி முடிவு செய்து அதற்காக வேட்புமனு தாக்கலும் செய்தார்.
இந்த நிலையில் பவானிபூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்கள் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். தொகுதி முழுவதும் 97 வாக்குப்பதிவு மையங்களில் 287 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி, பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 7.57 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை, பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.
பவானிபூர் தொகுதியில் கடந்த 2011-16ல் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். பவானிபூர் தவிர, ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இடங்களிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றால் தான் மேற்கு வங்க முதல்வராக மம்தா தொடரும் முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மம்தா இந்த இடைத்தேர்தலில் பெற்றி எம்எல்ஏவாக தேர்வாகி, முதல்வர் பதவியை தக்க வைப்பாரா என்று அக்டோபர் 3-ம் தேதி தெரியவரும்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…