7.5% உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு இயற்றியது. இதனால் உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இதனிடையே மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டத்தை 2020-2021 ஆம் கல்வி ஆண்டிலே அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இதில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்னுமும் ஆளுநர் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டுள்ளது.ஜெய்சுகின் என்பவர் தொடர்ந்த வழக்கில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடவேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு அடுத்த வாரத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…