7 -ம் தேதி தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்….இன்று நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் மோடி பங்கேற்பு….!!
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலையொட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்ட மன்ற தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று ஐதராபாத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com