7 மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
7 மாவோயிஸ்டுகள் ,Chhattisgarh மாநிலத்தில், காவல்துறையினருடன் நடந்த மோதலில், சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Bijapur மாவட்டத்தில் இன்று காலை இச்சம்பவம் நடந்துள்ளது. மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, தெலுங்கானா காவல்துறையின் மோப்ப நாய் பிரிவுடன் இணைந்து, Chhattisgarh காவல்துறையினர் தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 5 பெண் மாவோயிஸ்டுகள் உட்பட 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதோடு, ராக்கெடு லாஞ்சர், கையெறி குண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அண்மையில், மகாராஷ்டிராவில் நடந்த என்கவுன்டரில், 35 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.