7 மாநில அரசுகளுக்கு வாரம் எச்சரிக்கை!வாரம் முழுவதும் மழை பெய்யும்!தேசிய வானிலை ஆய்வு மையம்
தேசிய வானிலை ஆய்வு மையம்,வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இந்த வாரம் முழுவதும் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் அஸ்ஸாம், மேகாலயா, மேற்கு வங்கம், மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநில அரசுகளுக்கும் மழை பெய்யும் என்று வானிலை மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், கனமழை பொழிவால் தமன்கங்கா, பிரம்மபுத்திரா, கிருஷ்ணா மற்றும் பாரக் நதிகள் பெருக்கெடுத்து ஓடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.