8 மாநிலங்களில் 6ஆம் கட்ட தேர்தல்..! இதுவரை 10.82% சதவீதம் வாக்குப்பதிவு.!
டெல்லி : 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 9 மணி வரையில் 10.82% சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் டெல்லி, ஹரியானா உட்பட 6 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. 6-ம் கட்ட தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த தேர்தலில் 9 மணி வரையில் 10.82% சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
மேலும், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும், அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதுபோக, உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், பீகார் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், ஜார்கண்ட்டில் 4 தொகுதிகள், மற்றும் ஜம்மு&காஷ்மீரில் 1 தொகுதி என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் அதே நேரத்தில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் இந்த வாக்குப்பதிவானது இன்று மாலை 6 மணிக்கு நிறைவடையும். காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
காலை 9 மணி நிலவரப்படி, 10.82% சதவீத வாக்குகள் பதிவாகி இருந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
- பீகார் – 9.66%
- ஹரியானா – 8.31%
- ஜம்மு&காஷ்மீர்– 8.89%
- ஜார்கண்ட்- 11.74
- டெல்லி – 8.94%
- ஒடிசா – 7.43%
- உத்தரபிரதேசம்- 12.33%
- மேற்கு வங்காளம் – 16.54%