‘என்னைய மன்னிச்சிக்கோங்க அம்மா’- ஆன்லைன் கேமில் 40,000-ஐ இழந்த 6-ம் வகுப்பு சிறுவன் தற்கொலை…!
மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கேமில் ரூ.40,000-ஐ இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்.
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் மொபைல் போன் உள்ளது. இதனை சிலர் நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தினாலும், சிலர், அதனை தீய வழிகளிலும் பயன்படுத்துகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில், 6-ம் வகுப்பு பயின்று வரும் நோயியல் ஆய்வக உரிமையாளரின் மகன், இவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதோடுகூட தற்கொலை குறிப்பை வைத்து விட்டு சென்றுள்ளார்.
அந்த குறிப்பில் தன் தாயிடம் மன்னிப்பு கோரி மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாகவும், வங்கி கணக்கில் இருந்து ரூ 40,000 பணத்தை எடுத்ததாகவும், ஃப்ரீ பையர் விளையாட்டில் மூலம் பணத்தை வீணடித்ததாகவும் குறிப்பிட்டு தனது தாயாரை அழ வேண்டாம் என்றும் அந்த குறிப்பில் கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், சிறுவனின் தந்தையும் தாயும் வீட்டில் இல்லாத நேரம் தான் , இந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் தாயார் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது அறிந்து தொலைபேசிக்கு வந்த தகவலின்படி அவரது மகனை திட்டியதாகவும், இதனையடுத்து, சிறுவன் அவரது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
உள்ளே சென்று சில மணி நேரங்கள் கழித்தும் அவர் வெளியே வராததால், அவரது சகோதரி பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின் அறையின் கதவை உடைத்து உள்ளே போன போது, சிறுவன் தாவாணியை பயன்படுத்தி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. சிறுவரின் இந்த செயல் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.