அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6-வது முறையாக நிலநடுக்கம்.! அச்சத்தில் மக்கள்….
அந்தமான் – நிகோபார் தீவுகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து 6வது முறையாக நிலநடுக்கம்.
அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6வது முறையாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இன்று அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.6ஆகப் பதிவு ஆகியுள்ளது.
முன்னதாக, நேற்று பிற்பகல் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 3 மணியளவில் நிலநடுக்கம் அளவுகோலில் 4.1 ரிக்டர் ஆக பதிவாக, அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
பின்னர், 4.9, 3.9, 5.5 என அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவு செயப்பட்டுள்ளது. இது அந்தமான் – நிகோபார் தீவுகளில் இருக்கும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.