ஓரே கட்டமாக நடைபெற்ற கேரளாவில் 70.8% வாக்குப்பதிவு.!

Kerala Election 2024

Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதில், கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், அங்கு 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் மட்டும் 72.70% வாக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் உள்ள 2,77,49,159 வாக்காளர்களில் 1,43,33,499 பெண்கள் மற்றும் 5 லட்சத்திற்கும் அதிகமான முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 20 தொகுதிகளில் மொத்தம் 30,238 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மொத்தம் உள்ள 194 வேட்பாளர்களில் 169 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள் உள்ளனர். அதில், கோட்டயம் தொகுதியில் அதிகபட்சமாக 14 பேர் போட்டியிட, அதே சமயம் ஆலத்தூர் தொகுதியில்  ஐந்து பேர் போட்டியிட்டனர். மேலும் கோழிக்கோட்டில் 13 பேரும், கொல்லம் மற்றும் கண்ணூரில் தலா 12 பேரும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு

கேரளாவில் திருவனந்தபுரம், அட்டிங்கல், கொல்லம், பத்தனம்திட்டா, மாவேலிக்கரா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், சாலக்குடி, திருச்சூர், ஆலத்தூர், பாலக்காடு, பொன்னானி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, வடகரா, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்