69வது குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழுக்கு அனுமதியில்லை…!!
நாட்டின் 69வது குடியரசு தின கொண்டாட்டத்தில் மாநிலங்களின் பெருமையை பறை சாற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு கலாச்சாரத்தை பெருமை படுத்தும் விதமாக பொங்கலிடுவது போன்று அலங்காரம் செய்யப்பட்டு வந்த வாகனத்தில் தமிழ்நாடு என்பது கூட தமிழில் எழுதாமல்,இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. இதனால் அங்கு சர்ச்சை எழுந்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு அந்த அந்த மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் ஹிந்தி மொழியை கட்டாயப்படுத்தும் முயற்சியில் இறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.